பான் இந்தியா படமான தக்ஸ்
டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவர் இயக்கி வரும் படம் தக்ஸ். இது கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு குழுவின் பெயர். அந்த குழுவை மையமாக வைத்து இந்த படத்தை அவர் உருவாக்கி உள்ளார். தக்ஸ் குழுவினர் சிறையில் இருந்து திட்டமிட்டு எளிதாக தப்பி விடுவார்கள். அதுதான் கதை களமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது.
ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ்காந்த் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் தயாராகி வந்த இந்த படம் தமிழுடன் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. படத்தை எச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிவு தயாரிக்கிறார்.
ஹேய் சினாமிகாவில் காதலை சொன்ன பிருந்தா மாஸ்டர் இந்த படத்தில் தாதாக்களின் வன்முறைகளை சொல்ல இருக்கிறார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா, அனிருத் , கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.