சென்னை: அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் கணக்கெடுப்பு தொடங்கியுளளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கூறினார்.