இளவரசர் ஹரியின் விமர்சனத்துக்கு ஆளான டயானாவின் பட்லர்: தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி


எங்கள் தாய் டயானாவின் மரணத்தை சுயஇலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறார் என ஹரியால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே நபர்

இளவரசி டயானாவின் பட்லராக இருந்த Paul Burrell, தன்னை டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே நபர் என டயானாவே கூறியதாக தெரிவித்திருந்தார்.

இந்த Paul Burrell, இளவரசி டயானாவின் மரணத்தைக் குறித்து ‘A Royal Duty’ என்னும் புத்தகத்தை எழுதினார். அத்துடன், அவ்வப்போது டயானாவைக் குறித்து பேட்டிகளும் கொடுப்பதுண்டு அவர். அப்படியே ஒரு பெரும் தொகை பார்த்துவிட்டாராம் அவர்.

இளவரசர் ஹரியின் விமர்சனத்துக்கு ஆளான டயானாவின் பட்லர்: தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி | Paul Burrell Prostate Cancer Lorraine

இளவரசி டயானாவின் நண்பர் என அழைக்கப்பட்ட அவர், டயானாவின் மரணத்தை சுயலாபத்துக்காக பயன்படுத்தி, அதை வைத்து பணம் பார்த்துவிட்டதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இளவரசர் ஹரி.

Paul Burrell இளவரசி டயானாவைக் குறித்து புத்தகம் எழுதியதைக் குறித்து அறிந்ததும், தன் இரத்தம் கொதித்ததாகத் தெரிவிக்கும் ஹரி, அவரைத் தட்டிக் கேட்பதற்காக புறப்பட்டாராம்.

ஆனால், அவரது தந்தை சார்லசும், அண்ணன் வில்லியமும் ஹரியைத் தடுத்துவிட்டதாகவும், இல்லையென்றால், இந்த Paul Burrellஐ ஒரு வழி பண்ணியிருப்பேன் என்றும் கூறியிருந்தார் ஹரி.

சோகமான செய்தி

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக மருத்துவப்பரிசோதனை ஒன்றை செய்துகொண்டுள்ளார் Paul Burrell.

அந்த சோதனையின் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளன.

இளவரசர் ஹரியின் விமர்சனத்துக்கு ஆளான டயானாவின் பட்லர்: தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி | Paul Burrell Prostate Cancer Lorraine

ஆம், Paul Burrellஐ, prostate cancer என்னும் ஒருவகை புற்றுநோய் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற Paul Burrell, இந்த செய்தியை கண்ணீர் மல்கப் பகிர்ந்துகொள்ள, நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், புற்றுநோய் தன்னை கொஞ்சம்தான் பாதித்ததாக தெரிவித்துள்ள Paul Burrell, ஆனால், இளவரசர் ஹரி தன்னை அவரது புத்தகமான ஸ்பேரில் தாக்கியுள்ளதுதான் தனக்கு பலத்த அடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் ஏன் என்னை அம்மாவின் பட்லர் என அழைக்கிறார்? அவர் ஏன் என்னிடம் நேரடியாக வந்து தனக்கு வருத்தம் என்பதை சொல்லியிருக்கக்கூடாது என்கிறார் Paul Burrell.
 

இளவரசர் ஹரியின் விமர்சனத்துக்கு ஆளான டயானாவின் பட்லர்: தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி | Paul Burrell Prostate Cancer Lorraine



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.