விஜய் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியானது. என்னதான் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவினால் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியை சமீபத்தில் படக்குழுவிடம் சேர்ந்து விஜய் கொண்டாடிவிட்டு தளபதி 67 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Thalapathy 67: LCU வில் உருவாகின்றதா தளபதி 67 ? வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு..!
இந்நிலையில் தளபதி 67 படத்தில் விஜய் ஐம்பது வயது கேங்ஸ்டராக நடிப்பதாகவும், இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகி வருவதாகவும் பேசப்பட்டு வருகின்றது. மேலும் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.
இதையடுத்து தற்போது தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்தில் நடன இயக்குனராக தினேஷ் பணியாற்றவுள்ளார். இதைக்கேள்வி பட்ட ரசிகர்கள் நல்ல வேலை இப்படத்தில் ஜானி மாஸ்டர் இல்லை என கூறி வருகின்றனர்.
ஏனென்றால் பீஸ்ட், வாரிசு படங்களில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக இருந்தார். அப்படத்தில் விஜய்யின் நடனம் அந்தளவிற்கு இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தளபதி 67 படத்தில் ஜானி மாஸ்டருக்கு பதிலாக தினேஷ் பணியாற்ற இருக்கின்றனர். எனவே இப்படத்தில் பழைய விஜய்யின் நடனத்தை நாம் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.