Hansika Motwani: அம்மா வீட்டுக்கு வந்த ஃபீலிங்… சென்னையில் உணர்ச்சிவசப்பட்ட ஹன்சிகா மோத்வானி!

திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக சென்னை வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி அம்மா வீட்டிற்கு வந்த உணர்வு ஏற்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

லவ் ப்ரபோஸ்தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தொழில் அதிபரும் தன்னுடைய நீண்ட நாள் காதலருமான சோஹேல் கதூரியா என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பு பாரிஸில் ஹன்சிகா மோத்வானியிடம் காதலை ப்ரபோஸ் செய்தார் சோஹேல் கதூரியா. ​ Pooja Hegde: கல்யாண போட்டோக்களை ஷேர் செய்த பீஸ்ட் ஹீரோயின்… பதறிப்போன ரசிகர்கள்!​
திருமணம்ஈஃபிள் டவர் முன்பு சினிமா பாணியில் அவர் காதலை வெளிப்படுத்திய போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் முண்டோடா அரண்மனையில் கோலாகலமாக ஹன்சிகா – சோஹேல் கதூரியாவின் திருமணம் நடைபெற்றது. சங்கீத், ஹல்தி, திருமணம் என மூன்று நாட்கள் களைக்கட்டியது ஹன்சிகா சோஹேல் கதூரியாவின் திருமணம்.
​ Dancer Ramesh Death: என்னது.. அவர நான் கொன்னுட்டேனா.. அன்னைக்கு நடந்தது இதுதான்.. இன்பவள்ளி பரபர!​
ஹனிமூன் ​
அவர்களின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். திருமணம் முடிந்த கையோடு ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரியா, எகிப்து, துபாய் என பல்வேறு நாடுகளில் பறந்து பறந்து ஹனி மூன் கொண்டாடினார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தனது ஹனிமூன் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். ​
​ விக்கிக்கு வொர்கவுட் ஆகல … நயன்தாராவுக்கு ஆகுது!​
சென்னை வந்த ஹன்சிகாஇந்நிலையில் திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் கழித்து நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். மும்பையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஹன்சிகா மோத்வானிக்கு விமான நிலையத்தில் ரசிகர்களும் படக்குழுவினரும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பலர் நடிகை ஹன்சிகாவுக்கு ரோஜா பூக்களை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
​ Dancer Ramesh Death: முதுகு பிளந்திருந்தது… உடல் மோசமாக கிடந்தது… டான்ஸர் ரமேஷின் தாய் திடுக்!​
அம்மா வீட்டிற்கு வருவது போல்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹன்சிகா மோத்வானி, ஒவ்வொரு மகளும் தனது திருமணத்திற்குப் பிறகு அம்மா வீட்டிற்குத் திரும்பும் போது கிடைக்கும் உணர்வாக இது உள்ளது. தமிழில் சொல்ல வேண்டும் என்றால் அம்மா வீட்டுக்கு வரும் உணர்வு. நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பினால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லவ் யூ ஆல் என கூறினார்.
​ Bayilvan Ranganathan: அவரு பொண்ணுங்க விஷயத்துல அந்தமாதிரி… அர்ஜூன் குறித்து புட்டு புட்டு வைத்த பயில்வான்!​
மோதிரம் தான் மாறியிருக்கிறதுமேலும் இந்த ஆண்டு தன்னுடைய 7 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதாக கூறிய ஹன்சிகா மோத்வானி, இந்த ஆண்டு தனக்கு லக்கியான ஆண்டு என்றும் கூறினார். நந்தகோபால் இயக்கும் படத்தில் இன்று முதல் நடிக்கிறேன் என்றும் ஒரு மாதம் சென்னையில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் திருமணத்திற்கு பிறகு மோதிரம் தான் மாறி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

​ AK 62, Vignesh Shivan: ஏகே 62லிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட இதான் காரணமா? பிரபல பத்திரிகையாளர் பரபரப்பு தகவல்!​
Hansika Motwani1

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.