பாமக செயல்வீரர் பொம்மிடி பவுனேசன் மறைவுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தருமபுரி மாவட்டம் பொம்மிடி பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், பா.ம.க செயல்வீரருமான பவுனேசன் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
பொம்மிடி பவுனேசன் அவரது இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். 1996&ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, பொம்மிடி பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பவுனேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.