பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு
தமிழ், மலையாள படங்களில் நடித்து வருபவர் அமலா பால். தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் 'ஆடுஜீவிதம்', ‛கிறிஸ்டோபர்', போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று குடும்பத்தினருடன் வழிபாடு செய்துள்ளார் அமலாபால்.
சமீபத்தில் கேரளாவில் பிரபலமான திருவைராணிக்குளம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார் அமலாபால். ஆனால், தன்னை அனுமதிக்கவில்லை. 2023லும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் பழனியில் சமீபத்தில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் தாய் உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகனை வழிபட்டுள்ளார். ரோப்காரில் அவர் பயணித்தது, தரிசனம் செய்த பின் அவர் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகின.