கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை அடுத்த நான்கு வாரத்திற்குள் தாக்கல்செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷித் அமைப்பை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. மாநில அரசும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழக அரசின் கீழ் சுமார் 38,000 கோயில்கள் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து பதில் மனு தாக்கல்செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபன்னா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் எடுத்துள்ள மற்றும் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து நிலை அறிக்கையாக நான்கு வாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரம் ஒத்திவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM