டெல்லி: லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்.27-ல் நடக்கவிருந்த லட்சத்தீவு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது பைசலுக்கு கொலை முயற்சி வழக்கு ஒன்றில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து முகமது பைசலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனது. முகமது பைசலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனதை அடுத்து அங்கு ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் மேல்முறையீடு செய்ததை அடுத்து தண்டனையை ஐகோர்ட் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. முகமது பைசலின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை ஆணையம் நிறுத்திவைத்தது.