விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி 67 படத்தின் மூலம் இணையவுள்ளனர். லோகேஷ் கடைசியாக இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று உலகநாயகன் கமலை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இப்படத்தில் லோகேஷ் LCU என்ற டெக்னீக்கை உபயோகப்படுத்தியது ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றது. இதையடுத்து லோகேஷ் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார். இந்நிலையில் இவர் அடுத்ததாக விஜய்யை இயக்கப்போகின்றார் என்ற தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது.
AK 62: AK 62 திரைப்படத்தால் தள்ளிப்போகும் ஜெயிலர் ரிலீஸ்? குமுறும் ரஜினி ரசிகர்கள்..!
இதைதொடர்ந்து கடந்த மாதம் தளபதி 67 படத்தின் பூஜை போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. என்னதான் படப்பிடிப்பு நடைபெற்றாலும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடாமல் இருந்தது.
இதன் காரணமாக ரசிகர்கள் அப்டேட் எப்போது வரும் என லோகேஷை கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. ஆனால் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என சொல்லலாம்.
ஏனென்றால் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படம் LCU வில் இணைந்து உருவாகின்றதா இல்லையா என்பதைப்பற்றி அறிய ஆவலாக இருந்தனர். ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் படத்தின் அறிவிப்பு மட்டும் வெளியானதால் சில ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இருப்பினும் விரைவில் இதைப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.