10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பீஹார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் இருந்து வேலை தேடி வந்த தாய் ஒருவர் தனது மகள் ஒருவருடன் மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் முக்கிய நிகழ்வு ஒன்றிற்காக பீகார் செல்ல இருந்ததால் தனது மகளை பீகாரை சேர்ந்த ஒருவரின் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் பாதுகாவலராக இருந்த பீகாரை சேர்ந்த ராகுல் குமார் என்ற இளைஞர், மாணவி குளிக்கும்போது மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த வீடியோவை காட்டி மனைவியிடம் இருந்து பணம், நகைகளை பறித்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் ஊரிலிருந்து திரும்பிய தனது தாயிடம் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து மனைவியின் தாய் அளித்த புகாரின் பேரில் ராகுல் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட ராகுல் குமார் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டரையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.