அபுஜா : நைஜீரியாவில் நேற்று முன்தினம் நடந்த இருவேறு சாலை விபத்துகளில், இரு குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகினர். இதில் ஒரு விபத்தில் 11 பயணியர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்கா நாடான நைஜீரியாவில் மிகப்பெரிய வணிக நகரான லாகோசில் உள்ள பாலத்தில், நேற்று கன்டெய்னர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் மீது மோதியது. இதில் லாரி பஸ்சின் மீது விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கி இரு குழந்தைகள் உட்பட ஒன்பது பயணியர் உயிரிழந்தனர்.
லாகோஸ் அருகே உள்ள ஒன்டோ மாகாணத்தின் ஒடிகோவில் நடந்த மற்றொரு விபத்தில், பஸ் மீது லாரி மோதியதில்பஸ் தீப்பிடித்தது.
இதில், 11 பயணியர் அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் கருகி பலியாகினர். அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து என்பதால், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து பயணியரை காப்பாற்ற முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement