உலகின் தலைசிறந்த 100 கால்பந்து நட்சத்திரங்கள் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி முன்னிலையில் இருக்க, ரொனால்டோ கடுமையான சரிவை சந்தித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டின் நிபுணர்கள் தரப்பு வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார்.
2021ல் முதலிடத்தை தனதாக்கிய லியோனல் மெஸ்ஸி 2022ல் அந்த இடத்தை தக்கவைத்துள்ளார்.
@getty
இரண்டாவது இடத்தில் கைலியன் எம்பாப்பே இடம் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் கரீம் பென்சிமா, நான்காவது இடத்திற்கு எர்லிங் ஹாலண்ட் தெரிவாகியுள்ளார்.
இவர்களுடன் முதல் 10 இடங்களில் Kevin De Bruyne, Lewandowski, Vinicius Junior, Thibaut Courtois மற்றும் Mohamed Salah ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், 2021ல் 8வது இடத்தில் தெரிவான ரொனால்டோ 2022ல் 51வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
100 வீரர்கள் பட்டியலில் Sadio Mane மற்றும் Neymar முறையே 11 மற்றும் 12வது இடத்தில் உள்ளனர்.
@getty
இங்கிலாந்தின் ஹரி கேன் 13வது இடத்திலும், புகாயோ சகா 22வது இடத்திலும், மார்கஸ் ராஷ்ஃபோர்ட் 58வது இடத்திலும் உள்ளனர்.