புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் பார்லிமென்டில் தாக்கல் செய்த பிறகு, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின்போது, அவருடன் நிதியமைச்சகத்தின் உயரதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.
பொருளாதார ஆய்வறிக்கையானது, அனந்த நாகேஸ்வரனின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இரு பகுதிகள் கொண்டதாகும். முதல் பகுதியில் வழக்கமாக விரிவான பொருளாதார அலசல்களும், பெரியளவிலான பொருளாதார மேம்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
இரண்டாவது பகுதியில், குறிப்பிட்ட சில பிரச்னைகள் அதாவதுசமூக பாதுகாப்பு, வறுமை, கல்வி, ஆரோக்கியம், காலநிலை போன்றவை குறித்து இடம்
பெறும்.மேலும், இந்த ஆய்வறிக்கையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த பார்வை, பணவீக்க விகிதம், அன்னிய செலாவணி கையிருப்பு, வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவை குறித்தும் இடம்பெறும்.
பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் பார்லிமென்டில் தாக்கல் செய்த பின், www.indiabudget.gov.in/economicsurvey எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement