உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளை குரோஷிய ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆயுத உதவி
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளை ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
நேட்டோ வழியாக பிரித்தானியா, ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதை குரோஷிய ஜனாதிபதி ஜோரன் மிலானோவிக் கடுமையாக சாடியுள்ளார்.
@REUTERS/Susana Vera/File Photo
குரோஷிய ஜனாதிபதி ஆவேசம்
தலைநகர் ஜாக்ரெப்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘கீவிற்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ராணுவ உதவி பயனற்றது. மேலும் அது மோதலை நீட்டிக்கும்.
எந்தவொரு கொடிய ஆயுதங்களையும் அங்கு அனுப்புவதற்கு நான் எதிரானவன். அது போரை நீட்டிக்கிறது. இலக்கு என்ன? ரஷ்யாவின் சிதைவு அல்லது ஆட்சி மாற்றமா?’ என கேள்வி எழுப்பினார்.
கிரிமியா குறித்த கருத்து
மேலும் பேசிய அவர், ‘ரஷ்யாவை ஒரு மரபுவழி போரில் தோற்கடிக்க நினைப்பது பைத்தியக்காரத்தனம். கிரிமியா இனி உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்காது என்பது தெளிவாகிறது.
உக்ரைனைப் பற்றி மேற்குலம் செய்து கொண்டிருப்பது ஆழமான, ஒழுக்கக்கேடான விடயம். ஏனெனில் போருக்கு தீர்வு இல்லை’ என தெரிவித்துள்ளார்.
@Reuters
@AP Photo/Libkos