மெக்சிகோ நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேளிக்கை விடுதி
ஜகாடெகாஸ் மாகாணத்தின் ஜெரஸ் நகரில் ‘எல் வெனாடிடோ’ என்ற கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது.
உள்ளூர் மக்களிடம் மிகவும் பிரபலமான இந்த விடுதியில் ஏராளமானவர்கள் கூடியிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
சம்பவ இடத்திலேயே 6 ஆறு பேர் பலி
இதில் ஆண்கள், பெண்கள் என 13 பேரின் உடலில் தோட்டாக்கள் பாய்ந்தது. அவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது.
இதற்கிடையில் குறித்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
@Guardia Nacional
கவலைக்கிடம்
இந்த நிலையில் மேலும் சிகிச்சை பெற்று வரும் ஐந்து பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
@AFP