இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பலமுறை வேலை கேட்டும் தராததால், பங்க் மீது, பெட்ரோல் குண்டு வீசிய நபர் சிசிடிவி காட்சிகளின் மூலம் கைது செய்யப்பட்டார்.
கடந்த 28-ஆம் தேதி இரவு பரமக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் மீது ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிய நிலையில், ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பரமக்குடியை சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்ததையடுத்து, பரமக்குடி நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.
அந்த பெட்ரோல் பங்கில் கணேசன் பலமுறை வேலை கேட்டும் தராததால், அவர்களை பயமுறுத்த, பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.