சேலம்: பட்டியலின இளைஞரை அவதூறு வார்த்தைகளால் திட்டிய திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி கோயிலுக்குள் நுழைந்த இளைஞரை ஊர் மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம், அந்த இளைஞரை தாக்க முயன்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், […]