முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான ஹேமல் ரன்வல என்பவரே இவ்வாறு ஆதரவளித்துள்ளார்.
இந்த நிலையில் கனேமுல்லையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கும் முகமாக அவர் இணைந்துள்ளார்.
கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், “முன்னாள் ஜனாதிபதி கம்பஹாவுக்கு வரும்போது ஹேமல் ரன்வலவின் வீட்டிற்கு செல்லாமல் கம்பஹாவுக்கு வருவதில்லை.
அத்தகைய நெருங்கிய உறவினரான ஹேமல் ரன்வல தேசிய மக்கள் சக்தியுடன் இருக்கிறார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.