மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி. நடிகர் ஆவதற்கு முன்பு அவர் வழக்கறிஞராக இருந்தார். எர்ணாகுளம் சட்ட கல்லூரியில் எல்.எல்.பி பயின்ற மம்முட்டி அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்தார்.
இப்போது அவர் பயின்ற எர்ணாகுளம் சட்டக்கல்லூரி கிளாஸ் ரூமில் இருந்து ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் நேற்று வெளியிட்டுள்ளார். ‘அல்மா மேட்டர்’ என்ற குறிப்புடன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தான் சட்டக்கல்லூரியில் பயின்ற கிளாஸ் ரூமைக் காட்டியுள்ளார். இறுதியாக அந்த வீடியோவில் பேசும் மம்முட்டி, “இது எர்ணாகுளம் சட்டக்கல்லூரி. இதுதான் எனது ஃபைனல் இயர் கிளாஸ் ரூம்.
இப்போது இங்கு கிளாஸ் இல்லை. இதுதான் இண்டோர் கோர்ட், சிறு நிகழ்ச்சி இங்கு நடத்தினோம். இது ஒரு காலத்தில் கொச்சி மாநிலத்தின் சட்டசபை ஹாலாக இருந்தது” என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது. அந்த வீடியோவில் பின்னூட்டமிட்ட ரசிகர்கள் சிலர், எதாவது சினிமா ஷூட்டிங்கிற்காக அங்கு சென்றீர்களா? என கேட்டுள்ளனர். நரசிம்ஹம் என்ற சினிமாவில் மம்முட்டி வழக்கறிஞராக நடித்த கதாப்பாத்திரமான நந்தகோபால் மாரார் என்ற கெஸ்ட் ரோலை நினைவூட்டி ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மம்முட்டி நடித்த `நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் கடந்த 19-ம் தேதி வெளியானது. மம்முட்டி நடித்த ‘கிறிஸ்டோபர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
ஒரு வேளை கிறிஸ்டோபர் சினிமா காட்சிகள் எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் படமாக்கப்பட்டதா என்பதுபோன்ற கேள்விகளை கமெண்டில் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.