பழனி: பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் இருந்து 15 பேர் பழனி கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். உடுமலையில் இருந்து பழனி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது பக்தர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நரசிங்கபுரம் மேடு என்ற இடத்தில் நடந்த விபத்தில் நிர்மலா (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.