டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்கியதில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். முத்தலாக் முறை ரத்து விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் ஒன்றிய அரசு சிறப்பாக செயல்பட்டது. மத்தியில் தற்போது ஆளும் அரசு எதற்கும் அச்சப்படாமல் முடிவெடுக்கும் அரசு. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு முக்கியத்துவம் எனவும் கூறினார்.