டான்ஸர் ரமேஷை அவரது இரண்டாவது மனைவியான இன்பவள்ளி உருட்டுக்கட்டையால் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
டான்ஸ் நிகழ்ச்சிசமூக வலைதளங்களில் தனது நடனத்தால் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். டான்ஸர் ரமேஷ் தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் டான்ஸர் ரமேஷ். டான்ஸர் ரமேஷின் வித்தியாசமான நடன ஸ்டெப்புகளுக்கு அந்த நிகழ்ச்சியின் நடுவர்களான பாபா பாஸ்கர், நடிகைகள் சங்கீதா மற்றும் சினேகா ஆகியோர் பெரும் ரசிகர்களாக இருந்தனர். Valaxmi Sarathkumar: குடும்பத்துடன் பிகினியில் ஆட்டம் போட்ட வரு… தீயாய் பரவும் வீடியோ!
பிறந்தநாளில் மரணம்…இந்நிலையில் டான்ஸர் ரமேஷ் கடந்த 27ஆம் தேதி தனது பிறந்த நாளில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. டான்ஸர் ரமேஷ் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் இது தற்கொலை அல்ல கொலைதான் என அவரது முதல் மனைவி சித்ரா போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Nayanthara: அடுத்தடுத்து விழுந்த அடி… நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!
அதிர்ச்சி வீடியோஆனால் டான்ஸர் ரமேஷ், குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது இரண்டாவது மனைவியான இன்பவள்ளி தெரிவித்துள்ளார். இந்நிலையில் டான்ஸர் ரமேஷின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டாவது மனைவி இன்பவள்ளி மற்றும் அவருடைய மகளுடன் உள்ளார் டான்ஸர் ரமேஷ்.
Dancer Ramesh Death: என்னது.. அவர நான் கொன்னுட்டேனா.. அன்னைக்கு நடந்தது இதுதான்.. இன்பவள்ளி பரபர!
அடி தாங்க முடியலம்மாஅப்போது அடி தாங்க முடியலம்மா… என்னை விட்டுடும்மா, உடம்பெல்லாம் வீங்கி விட்டது என கதறுகிறார் டான்ஸர் ரமேஷ். அப்போது கையில் உருட்டுக்கட்டையுடன் கோபமாக உட்காந்திருக்கிறார் இன்பவள்ளி. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் சிதைந்து வீடே அலங்கோலமாய் கிடக்கிறது. அதோடு உடைந்த ஃபேனை கையில் வைத்துக் கொண்டு பேசும் டான்ஸர் ரமேஷ், என்னை வேலைக்கு போக சொல்கிறார்கள், சம்பாதிக்க சொல்கிறார்கள். என்னால் இனிமேல் வேலைக்கு எல்லாம் போக முடியாது.
விக்கிக்கு வொர்கவுட் ஆகல … நயன்தாராவுக்கு ஆகுது!
நீ தற்கொலை பண்ணுஎனக்கு குடிக்க காசு கொடுக்க மாட்டேங்கிறார்கள். நான் தற்கொலை செய்யப் போகிறேன். இதில் யாருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் டான்ஸர் ரமேஷ், இன்பவள்ளியிடமும் ஓகேவாம்மா… சொல்லிட்டேன் என்று உறுதிப்படுத்தி கொள்கிறார். அப்போது நீ தற்கொலை பண்ணு என்கிறார் இன்பவள்ளி. இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. டான்ஸர் ரமேஷின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மதுவும் மாதுவும்தான் இவரது சாவுக்கு காரணம் என கூறி வருகின்றனர்.
Dancer Ramesh Death: முதுகு பிளந்திருந்தது… உடல் மோசமாக கிடந்தது… டான்ஸர் ரமேஷின் தாய் திடுக்!
துணிவு படத்தில்மரணமடைந்த டான்ஸர் ரமேஷ் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் சிறு வேடத்தில் டான்ஸர் ரமேஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கும் படத்திலும் டான்ஸர் ரமேஷ் கமிட் ஆகியிருந்த தகவல் வெளியாகியுள்ளது. Bayilvan Ranganathan: அவரு பொண்ணுங்க விஷயத்துல அந்தமாதிரி… அர்ஜூன் குறித்து புட்டு புட்டு வைத்த பயில்வான்!
Dancer Ramesh