சென்னை: குட்கா தடையை நீதிமன்றம் நீக்கிய நிலையில், இது தொடர்பாக மீண்டும் சட்டத்திருத்தம் கொண்டுவருவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இன்று கோவையில், ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல் மற்றும் மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மருத்துவர்கள், நோயாளிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழ்நாட்டில் குட்கா விற்பனையை தடுக்க, தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவோம் […]