பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 90-யை தொட்ட பலி எண்ணிக்கை!


பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 90 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானில் திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்திற்குள் உள்ள மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 90 பேர் கொல்லப்பட்டு உள்ள நிலையில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 90-யை தொட்ட பலி எண்ணிக்கை! | Pak Peshawar Mosque Suicide Bomb Attack 83 KilledNDTV(Twitter)

தீவிரவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பெஷாவரில் வடமேற்கு நகரத்தில் பிற்பகல் தொழுகையின் போது இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மீட்பு பணிகள்

வெடிகுண்டு தாக்குதலில் மசூதியின் மேற்கூரை மற்றும் பக்கச் சுவரின் ஒரு பகுதி முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.

மீட்பு பணி தொடர்பாக 1122 இன் செய்தித் தொடர்பாளர் பிலால் அஹ்மத் ஃபைசி AFP-யிடம் வழங்கிய தகவலில், “இன்று காலை நாங்கள் இடிந்து விழுந்த கூரையின் கடைசி பகுதியை அகற்றப் போகிறோம், அதனால் மேலும் உடல்களை மீட்க முடியும், ஆனால் உயிர் பிழைத்தவர்கள் யாரையும் அடைய முடியும் என்று நாங்கள் நம்பவில்லை” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 90-யை தொட்ட பலி எண்ணிக்கை! | Pak Peshawar Mosque Suicide Bomb Attack 83 Killed

பெஷாவரில் உள்ள மருத்துவமனை செய்தி தொடர்பாளர் முஹம்மது அசிம் கான் வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 83 பேர் வரை இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாகவும், சம்பவ இடத்திலிருந்து உடல்கள் மீட்கப்பட்டால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சவப்பெட்டியில் வரிசையாக வைக்கப்பட்டு, பாகிஸ்தான் தேசிய கொடியால் மூடி மரியாதை செய்யப்பட்டு, குறைந்தது 20 போலீஸ் அதிகாரிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 90-யை தொட்ட பலி எண்ணிக்கை! | Pak Peshawar Mosque Suicide Bomb Attack 83 KilledBBC

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிக்கையில், “பாகிஸ்தானைப் பாதுகாக்கும் கடமையைச் செய்பவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பயங்கரவாதிகள் அச்சத்தை உருவாக்க விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.