நமோ நமோ மாதா – நூற்றாண்டில் காலடி என்ற தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திரதின நிகழ்வு பற்றிய விசேட தொகுப்பு
காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்களை பூர்த்தி செய்ய இன்னும் ஐந்து நாட்களே மீதமுள்ளன. 75ஆவது சுதந்திர தினம் தொடக்கம் சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் 2048ஆம் ஆண்டு வரையான எதிர்வரும் 25 வருடங்களில் பாரிய பல செயற்றிட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதனால் 75ஆவது நிறைவாண்டு வைபவம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சுதந்திர தின விழாவுக்காக 200 கோடி ரூபா செலவாகும் என சிலர் குற்றம் சாட்டுகின்ற போதிலும் அவ்வாறான பெருந்தொகை பணம் எதிர்வரும் 25 வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்காகவே ஒதுக்கப்படுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.