விஜய்யின் ‘தளபதி 67’ படக்குழுவினருடன் நடிகைகள் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் விஜய் – தயாரிப்பாளர் லலித்குமார் 2-வது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ‘தளபதி 67’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை தந்து கவனம் ஈர்த்துள்ளதால், ‘தளபதி 67’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ‘மாஸ்டர்’ படம் போன்று இல்லாமல், இந்தப் படம் 100 சதவிகிதம் தனதுப் படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதால், படத்தின் மீதான ஆர்வம் கூடுதலாக இருந்து வருகிறது.
ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கியுள்ளது தெரிய வந்தாலும், நேற்று மாலை தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் இன்று காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனைப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும் விமான டிக்கெட்டை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
Actress #PriyaAnand Flying to Kashmir for #Thalapathy67 Shoot. pic.twitter.com/UIJ3fqPloD
— Chandru (@ImChandruJcs) January 31, 2023
Actress #Trisha Flying to Kashmir for #Thalapathy67 Shoot. pic.twitter.com/mhWPtilueP
— #Thalapathy67 (@TheVijay67) January 31, 2023
இந்நிலையில், காஷ்மீர் செல்லும் படக்குழுவினருடன் நடிகைகள் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோரும் சென்றுள்ளதாக விமான நிலைய புகைப்படங்கள் மற்றும் டிக்கெட்டில் உள்ள பயணிகள் பட்டியலைப் பகிர்ந்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், விஜய், லோகேஷ் கனகராஜ், தினேஷ் மாஸ்டர் ஆகியோர் விமான நிலையத்தில் செக்கிங் பகுதியில் நிற்கும் வீடியோவை ரசிகர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
#Thalapathy67 Team At AirPort pic.twitter.com/pbUBq5VKi3
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 31, 2023
Actress #Trisha & #PriyaAnand flying to Kashmir for #Thalapathy67 shoot @actorvijay pic.twitter.com/BmLyRiBVGL
— (@TNVFC_OFFI) January 31, 2023