ஆந்திர மாநில நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினம் உருவெடுத்துவருவதாக அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் வரும் மார்ச் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று டெல்லியில் அதற்கான ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜெகன், ஆந்திர மாநிலத்தை உலகின் முன்னணி தொழில் வளர்ச்சி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆந்திராவில் தொழில் தொடங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான உதவிகளை மாநில அரசு தயங்காமல் செய்யும் என்றும் […]