சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி அகழ் ஆராய்ச்சி அமைக்கும் பணிகளை செய்துவந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தான் மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட இறுதி அகழாய்வு அறிக்கையை சமர்பித்துள்ளார்.
தமிழ்நாட்டு வரலாற்றை மாற்றி எழுத வைத்த கீழடி தொல்லியல் அகழாய்வு பணிகளை, கடந்த 2014-15 மற்றும் 2015-16 ஆம் ஆண்டுகளில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்திய தொல்லியல் துறை சார்பாக இரண்டு கட்டங்களாக மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது அவர் கண்டுபிடித்த தொல்பொருட்கள் யாவும், தமிழரின் வரலாற்றை மாற்றியது என்றேகூட சொல்லாம்.
இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டு, இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தான் மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட இறுதி அகழாய்வு அறிக்கையை சமர்பித்துள்ளார். மொத்தம் 31,919 சதுர அடி பரப்பளவில் 6 முக்கிய கட்ட தொகுதிகளை உள்ளடக்கியதாக இது அமைக்கப்பட்டு வந்தது.
`
இதன் பின்பு தான் தமிழ்நாடு தொல்லியல் துறை, ஒன்றிய அரசிடம் உரிய அனுமதியை பெற்று நான்கு – ஐந்து என்று தற்போது வரை 8 கட்டங்களாக அகழாய்வு பணிகளிகளை நடத்தியது. தொடர்ந்து அங்கு கண்டறியப்பட்ட தொல்பொருட்களில் 6 கரிம மாதிரிகள், பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது. அதில் கீழடி பண்பாடு 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தெரியவந்தது.
இந்த சூழ்நிலையில்தான், இந்திய தொல்லியல் துறை சார்பாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை டெல்லியில் மத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர் வித்யாவதியிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வந்தால் தான் கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் அதன் காலம், மனிதனின் வாழிக்கை முறை போன்ற விபரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM