சென்னை: நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்; இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும். பேரறிஞர் அண்ணா நினைவு நாளான பிப்.3 அன்று நடைபெறும் அமைதிப் பேரணி, அதற்கான தொடக்கமாக அமையட்டும் எனவும் கூறினார்.