ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று காவல் பார்வையாளராக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் சதிவேவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் தங்களது தேர்தல் பணிகளை தொடங்குவார்கள் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.