தேச மக்கள் என்ற ரீதியில் சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவதை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாது என்று அமைசரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இம்முறை 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இதன் மூலம் நாட்டில் தேசிய அபிமானத்தை ஏற்படுத்தக் கூடிய தேசிய வைபவத்திற்காக நாட்டு மக்கள் குறைந்த செலவில் அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இருப்பினும் இதற்காக செலவை மேற்கொள்ளும்போது அதனை குறைப்பது தொடர்பில் விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இது சர்வதேச ரீதியில் ஒத்துழைப்புக்களைப் பெற முக்கியமானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செலவை மேற்கொள்ளும்போது அத்தியாவசிய தேவைகளுக்காக செலவு செய்ய வேண்டும். இதனை மேற்கொள்ள வேண்டாம் என உத்திரவு பிறப்பிக்க தம்மால் முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.