விஜய் மற்றும் தளபதி 67 படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றுள்ளது.
தளபதி 67வாரிசை அடுத்து விஜய் நடித்து வரும் படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய். இதையடுத்து காஷ்மீரில் ஷூட்டிங் நடத்த முடிவு செய்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் படக்குழு இன்று காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றுள்ளது.
பயணம்
விஜய்காஷ்மீர் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜய்யின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. வழக்கம் போன்று இம்முறையும் விஜய்யை ஹேர்ஸ்டைல் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தளபதி ஹேட்டர்ஸ் எல்லாம் பார்த்துக்கோங்க, எங்க அண்ணனின் ஹேர்ஸ்டைல் செமயாக இருக்கிறது. இது ஒரிஜினல் முடியாக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தளபதி
சஞ்யசய் தத்தளபதி 67 படத்தில் ஒரு வில்லன் பட்டாளமே இருக்கிறது. அதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் அடக்கம். அவர் காஷ்மீர் ஷெட்யூலில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. சீயான் விக்ரம், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜுன் இருப்பது போதவில்லை என்று விஜய்யுடன் மோத சிலம்பரசனை அழைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
சிம்புசிம்புவுக்கு வில்லத்தனம் வருமா என்றெல்லாம் கேட்கக் கூடாது. நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் மிரட்டுவார் மனிதர். இப்படி கெத்து வில்லன்களாக தேர்வு செய்து தளபதியை சோதிக்கிறாரே லோகேஷ் கனகராஜ் என்பதே விஜய் ரசிகர்களின் பயம். அவர்களின் பயத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. முன்னதாக விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதி தான் ஹீரோவை விட ஸ்கோர் செய்தார். அந்த பயம் இன்னும் போகவில்லை.
Thalapathy 67: விஜய்க்கு இருக்கிற பிரச்சனை போதாதுனு இவர் வேறயா, வெளங்கிடும்
லோகேஷ்தளபதி 67 படம் முழுக்க முழுக்க என் ஸ்டைலில் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இருக்கு, ஏதோ தரமான சம்பவம் இருக்கு. தளபதியை வைத்து புதுசா ஏதோ முயற்சி செய்கிறார் லோகேஷ் என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். தளபதி 67 படம் குறித்து இந்த வாரம் முழுக்க அப்டேட் வேறு வருவதால் தளபதியன்ஸ் எல்லாம் கொண்டாட்ட மூடில் இருக்கிறார்கள்.
முடிவுவம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் எதிர்பார்த்தது போன்றே குடும்ப ஆடியன்ஸை கவர்ந்தது. இதையடுத்து தான் லோகேஷ் ஸ்டைலில் ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்துவிட்டார் விஜய். படத்தில் ஆக்ஷன் தூக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிவதற்குள் ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்து வெளியிட வேண்டும் விஜய் என்பதே தளபதியன்ஸின் ஆசை ஆகும்.