டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டு கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்த நபரை நள்ளிரவு வரை தேடி போலீசார் கண்டுபிடித்தனர்.
நேற்று மாலை டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் ஒருவர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டு கொல்லப்போவதாக கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து கொலைமிரட்டல் விடுத்த நபர் யார் என்று டெல்லி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். தொடர்ந்து நள்ளிரவில் அவரை கண்டுபிடித்தனர்.
நேற்று முன்தினம், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது, ஓடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், காவலர் ஒருவரால் சுடப்பட்டதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் வந்ததால் துரிதமாக செயல்பட்ட காவல்துறை போன் செய்த நபரை விரைந்து கண்டுபிடித்தனர்.
அதன்படி கொலைமிரட்டல் விடுத்தவர் டெல்லியின் முண்ட்கா (mundka) பகுதியில் வசிப்பவர் என்றும், 38 வயதான அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM