சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தகவல் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எங்களின் கருத்துகளை கேட்டு கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்யும் எனவும் கூறினார்.