விட்டுக்கொடுத்த தமிழக மக்கள்.. 43.96 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.

இதில் பெரும்பாலான மக்கள் ஆயிரம் ரூபாய் பரிசை வாங்கிச் சென்ற நிலையில் பலர் அந்த பணத்தை வாங்கவில்லை. எனவே, அந்த பணம் மீண்டும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வட சென்னையில் 35,723 ரேஷன் அட்டைதாரர்களும், தென் சென்னையில் 49,538 ரேஷன் அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு பணத்தை வாங்கவில்லை.

இதேபோன்று காஞ்சிபுரத்தில் 8026 ரேஷன் அட்டைதாரர்களும், செங்கல்பட்டில் 10,263 ரேஷன் அட்டைதாரர்களும், திருவள்ளூரில் 8,874 ரேஷன் அட்டைதாரர்களும் பணம் வாங்கவில்லை.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 4,39,669 ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பணத்தை வாங்கவில்லை. இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ. 43.96 கோடி மிச்சமாகியுள்ளது. இந்த பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தி விட்டதாக கூட்டுறவுத்துறை ‌ தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.