ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட ராணுவ உதவிகளை வழங்கும் ஒரு பகுதியாக, அமெரிக்கா உக்ரைனுக்கு 60 பிராட்லி ரக கவச வாகனங்களை அனுப்பியுள்ளது.
உக்ரைனுக்கு தற்போது அதிக திறன் கொண்ட ஆயுதங்கள் தேவைப்படுவதால், ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் 1980ம் ஆண்டு முதல் வீரர்களை போர்க்களங்களுக்கு அழைத்துச் செல்ல பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும், சக்திவாய்ந்த துப்பாக்கி பொருத்தப்பட்ட பிராட்லி கவச வாகனங்கள், தற்போது உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன.