புதுடில்லி: கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவை, உலகம் பார்க்கும் பார்வை மாறியுள்ளது. அதில் மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
வரவேற்பு
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று(ஜன.,31) துவங்கியது. பார்லிமென்ட் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
முக்கியம்
தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:
*சில ஆண்டுகளுக்கு முன்பு, நாடு 75வது ஆண்டு சுதந்திர தினத்தை நிறைவு செய்து சுதந்திர அமிர்த காலத்தில் நுழைந்துள்ளது.
*2047 க்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதில் பழங்காலத்து பெருமையும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும்.
* 2047 ல் அடையவிருக்கும் லட்சியத்திற்கு ஏற்ற அடித்தளத்தை அமைக்க வேண்டும்
*இந்திய நாடு ஏழைகள் இல்லாத நாடாகவும், மத்திய வர்க்கத்தினரும் நல்ல நிலையில் இருப்பவர்களாக அடுத்த 25 ஆண்டுகளில் மாற வேண்டும்.
*அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானது.
*9 ஆண்டுகளில் இந்தியாவை, உலகம் பார்க்கும் பார்வை மாறியுள்ளது. அதில் மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது.
5வது இடம்
*வெளிநாடுகளின் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுயசார்பு நாடாக மாறி வருகிறது.
*நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி, நாடு நடைபோட ஆரம்பித்துள்ளது.
*இந்தியா பொருளாதாரத்தில் 5வது இடத்தை அடைந்துள்ளது.
*25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாறும்.
அயராது பணி
*இந்தியாவின் வளர்ச்சியை மனதில் கொண்டு, எதற்கும் கலங்காத நிலையான அரசு அமைந்துள்ளது.
*சுயநம்பிக்கையோடு கூடிய ஆட்சி நடக்கிறது.
*இரு முறை இந்த அரசை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
*இந்தியாவின் நன்மைக்காக அரசு எடுத்த முடிவை உலக நாடுகள் பாராட்டுகின்றன.
*தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது.
ஊழலுக்கு எதிராக சட்டம்
*ஊழலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.
*அரசுத்துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது.
*ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது
*ஜனநாயகத்திற்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாக இருந்தது.
நேர்மைக்கு முக்கியத்துவம்
*அனைவருக்குமான வளர்ச்சி என்ற விதத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.
*பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறது.
*டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு
*ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்.
*தன்னிறைவு பெற்ற நாடே மத்திய அரசின் இலக்கு
*சுயசார்பு திட்டம் நாட்டு மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஏழைகளுக்கு மருத்துவ உதவி
*ஏழைகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு, அவர்களுக்கு வலிமை, சக்தி அளிக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
*ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமாக இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது.
*ஆயுஷ்மான் பாரத் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி கிடைத்துள்ளது.
*ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் குறைந்த மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.
*ஜல்ஜீவன் திட்டம் மூலம் 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் குடிநீர் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
* வளர்ச்சி அடையாத பகுதிகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.
* கோவிட் காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது.
* பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை முன்னெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் நலன்
*பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டு உள்ளன.
*பெண்கள் அதிகாரத்திற்காக அரசு பாடுபட்டு வருகிறது
*பெண்கள் எதிர்காலத்தில் அரசு கவனம் கொண்டுள்ளது.
*புதிய வீடுகள் கட்டும் போது அவை பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்படுகின்றன.
*அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்படுகிறது.
*இந்தியாவிற்கு புதிய பார்லிமென்ட் கிடைக்க உள்ளது.
*நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேகம் அசாதாரணமானது.
*உலகளவில் நலப்பணிகளை செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
*விவசாயிகளை கைதூக்கி விட அரசு உழைத்து வருகிறது.
இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்