தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் ஓரமாக சைக்கிளை நிறுத்திய முதியவர் மீது பின்னால் வந்த மினி லாரி மோதும் விபத்து காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இலஞ்சி நான்கு முக்கு பகுதியில், மாணிக்கம் என்ற முதியவர் மீது மோதிய மினி லாரி, ஓரமாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
முன்னால் சென்ற லாரியை, மினி லாரி ஓட்டுநர் முந்திச்செல்ல முயற்சித்ததால் விபத்து நேரிட்டது. காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மினிலாரி ஓட்டுநரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.