தண்ணீர் பற்றாக்குறையால் யானை, மான் உள்ளிட்டவை எல்லாம் ஒரே இடத்தில் தண்ணீர் பருகி கொண்டிருந்தன . அந்த தண்ணீருக்குள் தான் முதலையும் இருந்திருக்கிறது என்பது அந்த மானிற்கு தெரியவில்லை. வேட்டைக்காக சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முதலை அதன் தந்திர வேலைகளையும் அரங்கேற்றியது
முதலைகளை பொறுத்தவரை தண்ணீருக்குள் இருந்தால், அவற்றின் அசைவுகள் துளிகூட மேலே தெரியாது. எந்தவொரு சமிக்கையையும் காட்டாமல் புத்திசாலித்தனமாக இரைக்காக காத்துக் கொண்டிருக்கும். அப்படி தான் இந்தமுறையும் இரைக்காக காத்திருக்கிறது. மான் குட்டி ஒன்று வந்து தண்ணீர் பருகும்போது, நொடியும் தாமதிக்காமல் வேட்டையை அரங்கேற்றியது
யானை கூட்டம் ஒன்றும் அப்போது மான் கூட்டிக்கு அருகிலேயே தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த மான் குட்டி வலியால் துள்ளிக் குதிப்பதை பார்த்த யானை, உடனே தன் காலால் ஒரே ஒரு மிதி அவ்ளோ தான்.அந்த முதலை அந்த மானை விட்டுவிடுகிறது. மானும் தப்பிட்டோம் என கிளம்பியது. இது அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தான் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.