கச்சத்தீவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்து கொள்வதற்கு இந்தியாவிலிருந்து சுமார் 60 படகுகளில் 2,500 பேர் வரவுள்ளதாக வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தகவல் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் இந்தியா, இலங்கையில் இருந்து சுமார் 8,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத்தந்தை அனுப்பிய கடிதத்துடன், வேர்கோடு பங்குத்தந்தை தலைமையில், விழா ஒருங்கிணைப்பு குழுவினர், ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சந்தித்து, விழாவிற்கு
செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்யுள்ளானர்.
இந்திய தூதரகம் மூலம் உணவுகள் வழங்க நடவடிக்கை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேர்கோடு பங்குத் தந்தை கூறுகையில்,
இந்த ஆண்டு 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 2500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இருக்கின்றனர். மேலும் ஒரு விசைப்படகில் 35 திருப்பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது.
கச்சத்தீவு கடற்கரையில் வெயிலில் மக்கள் வாடாமல் இருப்பதற்கு பந்தல் மற்றும்
உணவுகள் இந்திய தூதரகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதார் கார்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும், இந்திய அரசும், இலங்கை அரசும் இணைந்து எல்லா ஏற்பாடுகளும் செய்து
திருப்பயணிகள் நல்லமுறையில் விழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 2ஆம் திகதி வழங்கப்படும்.
பெப்ரவரி 10ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வெளிமாவட்ட பயணிகள்
சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்று ஆதார் கார்டுடன்
விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு அலுவலர்களும் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க
வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.