சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’ படத்தினை ரஜினி தற்போது ஜெயிலரில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற டார்க் காமெடி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நெல்சன் திலீப்குமாருடன் முதன்முறையாக ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ‘ஜெயிலர்’ பட வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவிந்தது. இதனால் ‘ஜெயிலர்’ படத்தினை எப்படியாவது ஹிட்டாக்கி விடவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் நெல்சன்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘ஜெயிலர்’ படப்பிடிப்பு கடந்த ஆண்டு பூஜையுடன் துவங்கியது. இந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோரும் கேமியோ ரோலில் ஜெயிலரில் நடிக்கின்றனர். இதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Pathaan: ஷாருக்கானுக்கு வாழ்க்கை கொடுத்த ‘பதான்’: 5 நாட்களில் 500 கோடி வசூல்.!
இந்நிலையில் நேபாளத்தில் நடைபெறும் நான்காம் கட்ட ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து நேபாளம் சென்றார் ரஜினிகாந்த். இதற்காக சென்னை வந்த ரஜினியை கண்டதும் ஆர்வ மிகுதியில் ரசிகர் ஒருவர், தலைவா வாழ்க. ஒரே சூப்பர் ஸ்டார் என கோஷமிட்டுள்ளார்.
Thalapathy 67: இனிமே பட்டாசு தான்: சரவெடியாய் வெளியான ‘தளபதி 67’ அப்டேட்.!
அவரிடம் ரஜினிகாந்த், ஒழுங்கா போய் வேலையை பாருங்க என அன்பாக எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் நெல்சனின் முந்தைய படங்களை விட ஜெயிலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.