புதுடில்லி: அமெரிக்க முதலீட்டு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய துறைமுக கட்டுமான திட்டத்திற்கான டெண்டரை அதானி குழுமத்திற்கு அந்நாட்டு அரசு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பரக் ரிசர்ச், என்ற நிறுவனம் தொழிலதிபர் அதானி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த 24-ம் தேதி அறிக்கையாக வெளியிட்டது.
இந்நிலையில் இஸ்ரேலில் ”ஹைபா” துறைமுக கட்டுமான மேம்பாட்டினை மேற்கொள்வதற்கான டெண்டரை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கான இறுதி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாகதகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement