Thalapathy 67: தளபதி 67 விஜய் படம் இல்லையா ? இது என்ன புது கதையா இருக்கு..!

விஜய் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தளபதி 67 மூலம் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்ந்திருந்த லோகேஷ் இம்முறை முழுக்க முழுக்க தன் பாணியில் தளபதி 67 திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார். இப்படத்தின் பூஜை கடந்த மாதம் போடப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Thalapathy 67: ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கிய லோகேஷ் கனகராஜ்..உண்மையை உடைத்த பிரபலம்..!

நேற்று தான் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரங்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது. த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி, அர்ஜுன், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்திற்கு வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் இம்முறை விஜய் மீண்டும் லோகேஷுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரட்டிப்பாகியுள்ளது.

இதையடுத்து சில ரசிகர்கள் இப்படத்தின் எதிர்பார்ப்பு அனைத்திற்கும் லோகேஷ் தான் காரணம், இது விஜய் படம் இல்லை, லோகேஷின் படம் என கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுக்க இணையத்தில் மோதல் வெடித்துள்ளது.

AK62 மற்றும் தளபதி 67 படத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.