தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டில் திமுக நகர செயலாளர் சுரேஷ் மீது கொலை முயற்சிததாக வழக்கு தொடர்ந்துள்ளனர். குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர்.
திருச்செந்தூரில் கடந்த 2011-ம் ஆண்டு திமுகவினர் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அப்பொழுது திமுக எம்எல்ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகநேரி நகர, திமுக செயலாளர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த 2011 மார்ச் மற்றும் மே மாதங்களில் திமுக நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் பெட்ரோல் குண்டு வீச்சி, கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. இந்தக் கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக மூன்று பிரிவுகளில் அமைச்சர் அனிதாகிருஷ்ணன் 4-வது நபராக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேரையும் விடுதலை செய்தார்.