மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக வங்க கடலில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்துக்கேற்ப கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திமுகவைச் சேர்ந்த சிலர் அவரை வெளியே போகச் சொல்லி கூச்சல் எழுப்பினர்.
இதனால் கோபம் அடைந்த சீமான் “உனக்கு எத பத்தி அக்கறை இருந்து இருக்கு. உங்கள கடற்கரையில புதைக்க விட்டதே தப்பு. நீ பேனாவை ஒரு நாள் நானே வந்து உடைக்கிறேன். பேனாவை கடலுக்குள்ள தான் வைக்கணுமா உங்களுக்கு. ஏன் அண்ணா அறிவாலயத்தை முன்னாடி வை” என ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்திற்கு திமுகவினரும், திராவிட சித்தாந்தவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் திமுகவினர் சீமானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பிரபல எழுத்தாளரும் திமுக ஆதரவாளருமான மனுஷ்ய புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் சீமானை மிரட்டும் வகையில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் “சமூகத்தில் சாதிய ரீதியாகவும் பாலின ரீதியாகவும் ஒடுக்கப்பட்டோரின் தடைகளை எல்லாம் உடைத்த பேனா கலைஞருடையது. அந்த பேனாவை உடைப்பேன் என்று சொல்லும் சீமானின் கை எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என மிரட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
” சமூகத்தில் சாதிய ரீதியாகவும் பாலின ரீதியாகவும் ஒடுக்கப்பட்டோரின் தடைகளை எல்லாம் உடைத்த பேனா கலைஞருடையது. அந்தப் பேனாவை உடைப்பேன் என்று சொல்லும் சீமானின் கை எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாக இருக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.
— Manushya Puthiran (@manushyaputran) January 31, 2023