சென்னை: பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர். இவர் எழுதிய ‘ஜீன் மிஷின்: ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்ற நூலின் தமிழாக்கப் பதிப்பை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம், காலச்சுவடு இணைந்து வெளியிடுகின்றன.
சென்னை தரமணியில் உள்ள ஏஷியன் காலேஜ் ஆஃப்ஜர்னலிசம் கல்லூரி அரங்கில் நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி பிப்.6-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், ஏஷியன் காலேஜ் ஆஃப்ஜர்னலிசம் தலைவர் சசிகுமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார். நூலை ‘இந்து’ என்.ராம் வெளியிடுகிறார். நூலைமொழிபெயர்த்துள்ள சற்குணம் ஸ்டீவன், எழுத்தாளர் ஜி.குப்புசாமி, உரையாற்றுகின்றனர். வெங்கி ராம கிருஷ்ணன் ஏற்புரையும், காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் நன்றியுரையும் ஆற்றுகின்றனர்.