நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் உள்ள தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாம்பகுதியில் புலி தாக்கி பெண் பலியானார்.பழங்குடியின பெண்ணான மாரியை தாக்கி கொன்ற புலி அவரது கால் பாகத்தை தின்றது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று காணாமல் போன நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து மாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.