இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் பிரபலமான உலகின் டாப் 5 அணிகளில் ஒன்றாக ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அறியப்படுகிறது.
பிரபலமான அணியாக ஆர்சிபி
எஞ்சிய நான்கு இடங்களை கால்பந்தாட்ட கிளப் அணிகள் பிடித்துள்ளன.
இந்திய அளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் பிரபலமான அணியாக ஆர்சிபி உள்ளது. மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அதிக இன்ட்ரேக்ஷனை பெற்றுள்ள டாப் 5 அணிகளில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய அணியும் ஆர்சிபிதான்.
@AFP
உலக அளவில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான கிரிக்கெட் அணியாகவும் ஆர்சிபி அறியப்படுகிறது. சமூக ஊடக அனாலிட்டிக்ஸ் நிறுவனம் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது.
ஆர்சிபி அணி இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 948 மில்லியன் இன்ட்ரேக்ஷனை கொண்டுள்ளது. இதற்கு மற்றொரு காரணம் அந்த அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் விராட் கோலி என்றும் சொல்லப்படுகிறது.
ஐபிஎல் அரங்கில் ஒரே அணிக்காக விளையாடி வரும் இந்திய அணி வீரராக கோலி திகழ்கிறார். இன்ஸ்டாகிராம் தளத்தில் கோலி சுமார் 234 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார்.
முதலிடத்தில் Real Madrid CF
அவரது இருப்புதான் ஆர்சிபி அணி இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமாக இருக்க காரணமாம். கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இதற்கு மற்றொரு காரணம் என சொல்லப்படுகிறது.
@AP
மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் ஆர்சிபி அணியை இன்ஸ்டாவில் மேலும் பிரபலமடைய செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமான விளையாட்டு அணிகள் பட்டியலில், முதலிடத்தில் Real Madrid CF உள்ளது, 2வது இடத்தில் FC Barcelona, 3வது இடத்தில் Manchester United F.C.4வது இடத்தில் Paris Saint-Germain F.C. உள்ளது, 5வது இடத்தில் Royal Challengers Bangalore அணி இடம்பெற்றுள்ளது.