மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை சாக்லேட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி, தனது தாத்தா, பாட்டியிடம் நடந்தவற்றை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்த நிலையில், மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதையடுத்து இறுதி விசாரணை முடிந்து பாலசுப்ரமணியம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கிருபாகரன் மருதம் உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு பாலசுப்பிரமணியனை போலீசார் அழைத்துச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM